அதிகரிக்கும் வெப்பம் : குடிநீர் பாவனை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
Water
By Sumithiran
குடிநீர் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இதன்படி நாட்டில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதால், குடிநீரைச் சிக்கனமான பயன்படுத்துமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய வறட்சியான காலநிலையால் நீர் தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.
அதிகரித்துள்ள நீர் பாவனை
அத்துடன் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக மக்களிடையே நீரின் பாவனையும் அதிகரித்து காணப்படுகிறது.
அன்றாட தேவைகளுக்கு மாத்திரம்
இதனால், நீர் விநியோகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வாகனங்களைக் கழுவுதல் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை என்பவற்றுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்