இலங்கையில் திடீர் ஆட்சி மாற்றம் - இந்தியா வெளியிட்ட தகவல்
இலங்கையில் ஆட்சி மாற்றம்
இலங்கையில் இடம்பெற்ற திடீர் ஆட்சி மாற்றமானது நாடாளுமன்ற நடைமுறைக்கு ஏற்ப, அரசியலமைப்பின்படி இடம்பெற்றுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார உதவிகள் முன்னிலை அடிப்படையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர்,
“இலங்கையில் புதிய அதிபர் நாடாளுமன்ற நடைமுறைக்கு ஏற்ப அரசியலமைப்பின்படி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தற்போதைக்கு இலங்கையில் புதிய அதிபர் தெரிவாகியுள்ளதுடன், புதிய அரசாங்கமும் அமைக்கப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடி தீர்வு
பொருளாதார நெருக்கடி தீர்வுக்கு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகபட்சமாக வழங்கும் நாடுகளில் இந்தியாவும் அடங்குகிறது - இது தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.
எனினும் இதில் சில உதவிகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.
எனவே அது தொடர்பான வழிமுறை மேற்கொள்ளப்படும்” என்றார்.
