அரசியல் அழுத்தத்தால் உயிரிழந்த றெஜினோல்ட் குரே - தனித்து களமிறங்கும் சுதந்திர கட்சி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவமும், கட்சியின் மத்திய குழுவும் ஏற்கனவே தீர்மானித்தவாறு ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடாமல் தனித்து போட்டியிடுவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக செயலாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுப் பட்டியலைத் தயாரிக்கும் வேளையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான மறைந்த றெஜினோல்ட் குரே, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் அடிபணிந்ததாகவும் அவர் கூறினார்.
ரெஜினோல்ட் குரேயின் அகால மரணம்
முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான மறைந்த ரெஜினோல்ட் குரேயின் அகால மரணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுப் பட்டியலைத் தயாரிக்கும் போது அவருக்கு பிரயோகித்த அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் மன உளைச்சலுக்கு காரணமாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“வேட்பாளர் பட்டியலில் அவர்களுக்கு 50% மற்றும் 60% என்று அவர்கள் கோரினர், இறுதியாக 100% முழுவதையும் அவர்களுக்கு வழங்கவும், தனியாக தேர்தலுக்கு செல்லவும் முடிவு செய்தோம்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த சதி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் சதியும் இருந்ததால் அது எமக்கு சிறந்த தீர்வாக இருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
