'பிராந்திய போர் வெடிக்கும்' : அமெரிக்காவை கடுமையாக எச்சரிக்கும் ஈரான் உச்ச தலைவர்
அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால் , இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று அயதுல்லா கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய தேசம் தகுந்த பதிலடி கொடுக்கும்
மேலும், "நாங்கள் தூண்டுபவர்கள் அல்ல, எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஈரான் தேசத்தைத் தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் ஈரானிய தேசம் தகுந்த பதிலடி கொடுக்கும்.

சமீபத்திய கிளர்ச்சி ஒரு இராணுவப் புரட்சியைப் போன்றது. நிச்சயமாக, அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டது." என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது கடற்படையை ஈரான் அருகே அனுப்பியுள்ள நிலையில் கமெனி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போர் பதற்றத்திற்கு மத்தியில் தீவிர பேச்சுவார்த்தை
ஒருபுறம் போர் பதற்றம் நிலவினாலும், மோதலைத் தவிர்க்க இரு நாடுகளும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் "சீரியஸாகப் பேசி வருகிறது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இதற்கான கட்டமைப்பு தயார் செய்யப்பட்டு வருவதாகவும் ஈரானின் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்