விசாரணை வளையத்துக்குள் வந்த அதிகாரிகள்! களத்தில் மத்திய புலனாய்வு பிரிவு
தவறான தகவல்களின் அடிப்படையில் வாகனங்களைப் பதிவு செய்த சம்பவங்கள் தொடர்பாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவறான தகவல்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 8 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணை
மேலும், விசாரணைகளில் இந்த வாகனங்கள் சுங்கத்திலிருந்து மறைத்து, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் பழைய வாகனங்களின் பதிவு(செஸி) எண்களின் கீழ் பதிவு செய்யப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.
சில வாகனங்களைப் பதிவு செய்வதற்கான தரவு அலுவலக நேரத்திற்குப் பிறகு கணினிகளில் உள்ளிடப்பட்டதாகவும், மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு இதற்கு உதவியதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, நீதிமன்ற உத்தரவின் பேரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பல அதிகாரிகளிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
