மலையக மக்களைக் கௌரவித்த இந்தியாவிற்கு வரவேற்பு

Sri Lanka Jeevan Thondaman Senthil Thondaman India
By Sathangani Dec 30, 2023 11:32 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும், ஒத்துழைப்புகளுக்கும் மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை கௌரவப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஏற்பாட்டில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளமையும் இதற்கு மற்றுமொறு சான்றாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பாரதிய ஜனதாக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வு இன்று (30) சிறப்பாக நடைபெற்றது.

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை! கிழக்கு ஆளுநரிடம் கையளிப்பு

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை! கிழக்கு ஆளுநரிடம் கையளிப்பு


நினைவு முத்திரை வெளியீடு

இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“இந்நிகழ்வில் பங்கேற்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன், தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையிட்டு வருந்துகின்றேன்.

மலையக மக்களைக் கௌரவித்த இந்தியாவிற்கு வரவேற்பு | Release Of Stamp In Honor Of Upcountry People

எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி எமது கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அதேபோல பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விழா ஏற்பாடு குழுவினருக்கு மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டு மக்களுக்கு பேரிடி! ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படும் தொலைபேசி கட்டணங்கள்

நாட்டு மக்களுக்கு பேரிடி! ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படும் தொலைபேசி கட்டணங்கள்


இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த உறவுப் பாலமாக அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் இருந்து வருகின்றது.

மலையக மக்களைக் கௌரவித்த இந்தியாவிற்கு வரவேற்பு | Release Of Stamp In Honor Of Upcountry People

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு என்றும் நாம் ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் பல உதவிகளை செய்துள்ளது. வீடமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், தொழில் பயிற்சிகள் என அந்த பட்டியலை நீடித்துக்கொண்டே செல்லலாம்.

இந்நிலையில் எமது மக்களை கௌரவப்படுத்தி நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை எமது மக்கள் மீதான இந்தியாவின் கரிசனையை உறுதிப்படுத்துகின்றது. " - என்றார்.

மெக்சிக்கோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் பலி

மெக்சிக்கோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் பலி



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024