கொரோனா தொற்று தொடர்பில் வெளியான விபரம்!
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 10 பேரும், 30 முதல் 59 வயதுக்குட்டபட்டவர் 6 பேரும், 30 வயதுக்கும் குறைந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் ஆண்கள் எனவும் 6 பேர் பெண்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை14, 903 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று மேலும் 458 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 584,107 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 248 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 559,684 ஆக அதிகரித்துள்ளது.