க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 பெறுபேறுகள் வெளியீடு!
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Jaso
கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 தேர்வு மையங்களில் நடைபெற்றிருந்தது.
குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
