மின் பாவனையாளர்களுக்கு ஜனாதிபதி அளித்த நிவாரணம்
Anura Kumara Dissanayaka
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Sumithiran
90 யூனிட்டுகளுக்கும் குறைவான மின்சாரப் பயன்பாடு கொண்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 15 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசின் பொருளாதார நிவாரணத் தொகுப்பை முன்வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார். எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சாரம் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்களை அமைப்பதால் ஏற்படும் கூடுதல் செலவை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவதற்குப் பதிலாக,
90 யூனிட் குறைவான மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம்
90 யூனிட்டுகளுக்கும் குறைவான மின்சாரப் பயன்பாடு கொண்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, தொடர்புடைய மேலதிக செலவை 03 மாத காலத்திற்கு அரசே ஏற்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அண்மையில் மின்சார கட்டணங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி