திருகோணமலை சர்ச்சைக்குரிய புத்தர்சிலை : சிறையில் அடைக்கப்பட்ட தேரர் சாகும் வரை உண்ணாவிரதம்
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப தேரர், இன்று(15) காலை முதல் உணவு உள்ள மறுத்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பலாங்கொட கஸ்ஸப தேரர் காலை மற்றும் மதிய உணவு உட்கொள்ள மறுத்து இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது.
புத்தர்சிலை வைக்கப்பட்டமை
நவம்பர் 16 ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக நான்கு பிக்குகள் மற்றும் ஐந்து பேர் அடங்கிய ஒன்பது பேர் நேற்று (14) திருகோணமலை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தேரர் சாகும் வரை உண்ணாவிரதம்
பலாங்கொட கஸ்ஸப தேரர் மட்டுமே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார், அதே நேரத்தில் மற்ற பிக்குகள் வழக்கம் போல் உணவு பெற முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரின் இந்த உண்ணாவிரதம் குறித்து திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை திருகோணமலை துறைமுக காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |