பதவி நீக்கப்படுவாரா தேசபந்து..! நியமிக்கப்பட்டது விசாரணை குழு
இடைநிறுத்தப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவிற்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மற்றைய இரண்டு உறுப்பினர்களாக நீதிபதி நீல் இத்தவெல மற்றும் காவல் ஆணையத் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வாக்கெடுப்பு
இந்த நிலையில், இடைநிறுத்தப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை கடந்த 08 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் சமர்பிக்கப்பட்ட இந்த பிரேரணை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
