ஹட்டனில் அகற்றப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள்!
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குச் சொந்தமான சந்தை வளாகத்திலுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கைகள் இன்று (19.11.2026) முன்னெடுக்கப்பட்டன.
இந்தக் கட்டுமானங்களை அகற்ற முற்பட்டபோது அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், சில வியாபாரிகள் தமது சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றிக்கொள்வதற்கு நகர சபைக்குத் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்த நிலையில் சிலர் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நீண்டகாலமாக அனுமதியற்ற முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், தங்களுக்கு வியாபாரம் செய்வதற்கு மாற்று இடமொன்றை வழங்கிய பின்னரே, தங்களது கட்டுமானங்களை அகற்ற நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம்! ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை
பொதுமக்களின் பாதுகாப்பு
இதன்படி எவ்வித பாகுபாடுமின்றி சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹட்டன் காவல்துறையின் சுற்றாடல் பிரிவு அதிகாரிகள் மற்றும் நகர சபை ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


