பதவி நீக்கப்படுவாரா சட்டமா அதிபர்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (ஜனவரி 22) நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு அமைச்சர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடக அறிக்கைகள்
அதன்போது மேலும் தெரிவித்த அவர், “சமூக ஊடகங்களில் எந்த வகையான அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவைக்குள் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் சட்டமா அதிபர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன, மற்றவை அவர் நீக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. சில அறிக்கைகள் சட்டமா அதிபர் மட்டுமல்ல, நீதி அமைச்சரும் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறுகின்றன,” என்றார்.
அத்தோடு, நீதி அமைச்சர் அல்லது வேறு எவருக்கும் எதிராக முறைப்பாடுகள் இருந்தால், இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக பொருந்தும் என்றும், முறைப்பாடுகள் அளிக்கலாம் என்றும் அமைச்சர் நாணயக்கார மேலும் சுறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |