மீண்டும் வைக்கப்பட்ட அகற்றிய புத்தர் சிலை! முடிவின்றி தொடரும் சர்ச்சை
திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து சட்ட, அரசியல் பதற்றம் உயர்ந்துள்ளது.
கடற்கரை பாதுகாப்பு துறையினர் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட கடற்கரை நிலம் எனக் குறிப்பிட்டு கட்டுமானம் சட்டவிரோதம் என முறைப்பாடும் செய்யப்பட்டது.
காவல்துறையினர் குறித்த சிலையை அகற்றியும் பின்னர் “பாதுகாப்பு காரணங்களால்” மீண்டும் வைத்தது சர்ச்சையை அதிகரித்தது.
தமிழ் அரசியல் கட்சிகள் இதை சிங்கள-பௌத்த ஆதிக்க முயற்சி என கடுமையாக விமர்சிக்கின்றன. மேலும் இது பிக்குகள் மற்றும் தேசியவாத அமைப்புகள் எதிர்வினை வெளியிட்டுள்ளன.
இதன்படி அரசு விசாரணை தொடங்கியுள்ளதுடன், பிரச்சனை தீர்ந்ததாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் எமது ஊடகமானது தமிழரசு கட்சி உறுப்பினரை நேர்காணல் செய்தபோது “எங்களால் சுதந்திரமாக இயங்க முடியாது” என கூறிய விடயம் தமிழர்களிடத்தில் காணப்பட்ட ஆதங்கங்களின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.
இந்நிலையில் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் அறியப்படாத சில விடயங்கள் பின்வரும் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |