IBC தமிழ் ஊடகத்தை ஆடையில்லாமல் வீதியில் நிற்கும்படி கூறிய வைத்தியர் அர்ச்சுனா !
Jaffna
Hospitals in Sri Lanka
Sonnalum Kuttram
By Independent Writer
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா (Ramanathan Archchuna) IBC தமிழ் ஊடகத்தை ஆடையில்லாமல் வீதியில் நிற்கும்படி கூறி காணொளி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அர்ச்சுனாவின் காணொளிக்கான பதிலை வழங்கியுள்ளது IBC- தமிழ் ஊடகம்,
- வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றபோது வைத்தியர் அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டிருந்தார் என்பதையும்,
- சர்ச்சைக்குரிய அந்தக் கலந்துரையாடல் நடைபெற்றபோது வைத்தியர் அரச்சுனா வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு பதிவிநிலையையும் வகிக்கவில்லை என்பதையும்,
- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் அவர் அழைக்கப்படவில்லை என்பதையும்,
- அழையா விருந்தாளியாக அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அர்ச்சுனா விருந்தினர்களுக்கான இருக்கைகளில் அமரவைக்கப்படவில்லை என்பதையும்,
- வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பாக அவர் அங்கு எந்த உரையையும் நிகழ்த்தவும் இல்லை என்பதையும்,
- IBC- தமிழ் தனது காணொளியில் தெரிவித்து நிற்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்