சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடுகிறதா இலங்கை? நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிக்கை
சர்வதேச நாணய நிதியத்தினால் தமக்கு இரகசிய அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தன்னால் வெளியிட முடியவில்லை எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ((Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நன்கொடை வழங்கும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டதுடன், கலந்துரையாடல்களை ஏனைய அமைச்சர்களிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலக வங்கியின் பிராந்திய தலைவர் அரசதலைவரையும் தம்மையும் நேற்று சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.