வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் தமக்கு விரைவில் வழங்க உள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பிலான விரிவான தகவல்கள் அதில் உள்ளடக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
இறக்குமதி துறை நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
பிரிவுகளின் கீழ் இறக்குமதி
அதன்போது, அனைத்து வாகனங்களையும் ஒரே நேரத்தில் இறக்குமதி செய்யாமல் பல பிரிவுகளின் கீழ் இறக்குமதி செய்வது நடைமுறைச் செயல் என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அதில் பொது போக்குவரத்துக்கு தேவையான வாகனங்கள், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், தனியார் வாகனங்கள் போன்றவற்றை பாகங்களாக இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது மிகவும் நடைமுறைக்குரியது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |