வேட்டையாடுவதை நிறுத்துங்கள்! ராஜபக்ச அரசாங்கத்திடம் விநயமான கோரிக்கை

mahinda gotabaya Manusha Nanayakkara request
By Vanan Sep 30, 2021 07:33 PM GMT
Report

இலங்கை மக்களுக்கு உண்மைகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சியினர் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கின்ற அதேவேளை, அரச நிறுவனங்கள் அரசியல்மயமாகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபையின் தரவுகள் காணாமல்போன விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மனூஷ நாணயக்கார, எதிர்கட்சியையும் ஊடகவியலாளர்களையும் வேட்டையாடுவதை கோட்டாபய - மஹிந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“நாங்கள் திருடர்களை வெளிப்படுத்தும் போது எங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கின்றனர். வெள்ளைப்பூண்டு மாபியாவை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை வேட்டையாடுகிறார்கள். எனினும் இந்த திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது. அதுதான் இன்று இடம்பெறுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களையும் பயன்படுத்தி, அரச அதிகாரிகளையும் பயன்படுத்தி உண்மை வெளிப்படுத்தப்படுவது தடுக்கப்படுகின்றது. இதுவொரு அடக்குமுறை.

நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும்போது அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலையில், வெளியில் ஒரு வார்த்தையை வெளியிட்டால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கின்றனர்.

விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை அடக்குவதற்கு இந்த அரசாங்கம் அரச இயந்திரங்களை பயன்படுத்துகின்றது.

அரச நிறுவனங்கள் இன்று எதிர்க்கட்சியை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அதனை நிறுத்துமாறு கேட்கின்றோம். இந்த அரசியல் மயமாக்கலை நிறுத்துங்கள் என கேட்கின்றோம்” என அவர் கூறியுள்ளார்.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026