சுவிஸ் தூதரகத்தின் யாழ். அலுவலகம் தொடர்பில் கொழும்புக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்
sri lanka
jaffna
reopen
swiss
By Shalini
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய பயணத்தில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகம் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே குறித்த அலுவலகத்தை மீள திறக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.