இராவணனின் விமானங்களை தேடி இலங்கையில் ஆய்வு! உறுதிப்படுத்தப்பட்ட இடங்கள்
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAASL) ஆய்வு பிரிவு, இராவணன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 விமானங்களை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளது.
இவ்விமானங்கள் நாட்டின் 25 இடங்களில் மறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இவ்விடங்கள் குறித்து பல விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
விமானங்கள் இருக்கும் இடங்கள்
ஆய்வில் இந்த விமானங்கள் இராவணனால் தயாரிக்கப்பட்டு, பாறைகுகைகள் மற்றும் மலைப்பகுதிகளுக்குள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், குருநாகல், வாரியாபொல, சிகிரியா, தம்புள்ளை, பதுளை, மகியங்கனை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட இடங்களில் அவை இருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விமானங்களை இயக்குவதற்கான ஒரு நியமன நபர் இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
CAASL ஆய்வு, மேம்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவு மேலாளர் நுரங்க அதிகாரி, இந்த விமானங்களின் இருப்பிடத்தை உறுதியாகத் தீர்மானிக்க ஒரே வழி கார்பன் பரிசோதனையென்றும், ஆனால் ஒரு பரிசோதனைக்கே ரூ. 20 இலட்சத்திற்கும் மேல் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் இத்தகைய பரிசோதனை செய்யும் தொழில்நுட்ப வசதி இல்லாததால், அது அமெரிக்காவில் மட்டுமே செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் நிதி பற்றாக்குறை
இந்த தேடுதல் திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டாலும், அரசின் நிதி பற்றாக்குறையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அப்போது இந்திய விஞ்ஞானிகள் பங்கேற்ற ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் அதில் இணைந்திருந்தார். ஆனால் பின்னர் அவர் விலகினார்.
பல உள்ளூர் நிபுணர்கள் பங்கேற்றிருந்தாலும், பல்வேறு சவால்கள் காரணமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஒரு விமானமாவது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், உலகின் முதல் விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் என்ற வரலாற்றுச் சான்றில் பெரிய விவாதம் எழுந்திருக்கும் என நுரங்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், தேடுதல் பணிகளை வரும் ஆண்டுக்குள் மீண்டும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
