கடும் தொனியில் கோட்டாபய போட்ட உத்தரவு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் கீழ், பதவி நீக்கப்பட்ட தெசார ஜயசிங்க மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவியில் நியமிக்கப்படவுள்ளதாக அரச தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சின் செயலாளருக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
இன்று (13) முற்பகல் கெரவலபிட்டிய − முத்துராஜவெல மாபிம லிட்ரோ எரிவாயு நிறுவன வளாகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட அவர், குறித்த பதவிநீக்கம் குறித்து தனக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து தெசார ஜயசிங்கவை மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதோடு, புதிய தலைவர் நியமனத்தை இரத்துச் செய்வதற்கான கடிதம் அவசரமாக நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி - https://ibctamil.com/article/action-activity-of-litro-gas-company-1642068870