உடனடியாக பதவி விலகுங்கள் -தேரர் விடுத்த எச்சரிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksha) வேண்டுமென்றே தனது கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டார் என ஓமல்பே சோபித தேரர் (Omalpe Sopita Thero) கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் உலக நாடுகளில் அரச தலைவர்களும் அமைச்சர்களும் பதவி விலகுவது வழமை. சுயநலம்மிக்க சிறிய வர்த்தகர்கள் குழுவை கூட கட்டுப்படுத்த முடியாத அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் திறமையின்மை வெளிப்பட்டுள்ளது. நெருக்கடிக்கு பொறுப்பேற்று வர்த்தக அமைச்சர் பதவி விலகவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவைரஸ் பெருந்தொற்று காரணமாக மக்களிற்கு மிகவும் அவசரமாக உதவிதேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள ஓமல்பே சோபித தேரர்
அரிசி விலைகளை வர்த்தகர்கள் தீர்மானிப்பதற்கு அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.