அரச ஊழியர்களுக்காக நியமிக்கப்பட்டதே உதய செனவிரத்ன குழு : முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டு

Colombo A D Susil Premajayantha Government Employee Government Of Sri Lanka
By Sathangani Nov 07, 2024 03:52 AM GMT
Report

அரச ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த சம்பள முரண்பாடு மற்றும் சம்பள அதிகரிப்புக்கு தீர்வு காணவே உதய செனவிரத்ன குழு (Udaya Seneviratne Committee) நியமிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நேற்று (06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த நாட்டை அதில் இருந்து மீட்பதற்கு பாரிய முயற்சிகளை எடுத்துவரும் சந்தர்ப்பத்தில் கல்வி, சுகாதாரம், தொடருந்து தொழிற்சங்கங்கள் அடிக்கடி தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொண்டு வந்தன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை மற்றும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகாண வேண்டும் என்றே அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமையவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணவும் உதய செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது.

அரச ஊழியர்களுக்காக நியமிக்கப்பட்டதே உதய செனவிரத்ன குழு : முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டு | Resolve To Salary Dispute Of Govt Employees Susil

செனவிரத்ன குழுவின் பரிந்துரைக்கமைய அடிப்படை சம்பளத்தில் நூற்றுக்கு 24வீத சம்பள அதிகரிப்புக்கு பரிந்துரை செய்திருந்தது. அதேபோன்று வாழ்க்கைச்செலவு கொடுப்பனவை 17,800 ரூபாவில் இருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கு தேவையான வருமானத்தை வாகன இறக்குமதி மூலம் கிடைக்கப்பெறும் தீர்வை வரி மூலம் பெறவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்திருந்தன.

ஆனால் தற்போது தொழிற்சங்கங்கள் தேவைப்படாது எனவும் தொழிற்சங்கங்களை நீக்குவதாகவும் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். தொழிற்சங்கங்களும் இது தொடர்பில் மெளனமாகவே இருந்து வருகின்றன. அப்படியானால் தொழிற்சங்கங்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதா என நாங்கள் கேட்கிறோம்.

தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு: தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவு: தேர்தல் ஆணைக்குழு

வற் வரியை குறைத்தல்

அதேபோன்று உழைக்கும்போது செலுத்தும் வரியை குறைப்பதாக அரசாங்கம் தெரித்திருக்கிறது. அவ்வாறு அந்த வரியை குறைக்கும்போது அரசாங்கத்தின் வருமானம் குறைகிறது. அந்த வருமானத்துக்கான வழி என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

அரச ஊழியர்களுக்காக நியமிக்கப்பட்டதே உதய செனவிரத்ன குழு : முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டு | Resolve To Salary Dispute Of Govt Employees Susil

அத்துடன் பொருட்களுக்கான வற்வரியை குறைப்பதாகவும் தெரிவித்தார்கள். அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கும் பிரதான வழியே இந்த வரிகள். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் பிரகாரம் வரிகளை குறைக்கும்போது குறையும் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழியை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு அமைய 2028ஆம் ஆண்டு நாங்கள் மீண்டும் கடன் செலுத்துவதற்கு முடியுமான வகையில் எமது பொருளாதாரம் அபிவிருத்தி அடைய வேண்டும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

தற்போதைய வருமானத்தின் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு ஒரு வீதத்துக்கும் அதிகம் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும்போது வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன?

அரச ஊழியர்களுக்காக நியமிக்கப்பட்டதே உதய செனவிரத்ன குழு : முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டு | Resolve To Salary Dispute Of Govt Employees Susil

அதேபோன்று தற்போது கிடைக்கும் வருமானம் குறையும் வகையில் அரசாங்கம் வரி குறைப்புகளை மேற்கொண்டால் அந்த வருமானத்தை எவ்வாறு ஈட்டிக்கொள்வது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதேநேரம் அதற்கான வருமானத்துக்கும் வழியை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நெருக்கடி நிலையே ஏற்படும்“ என தெரிவித்தார்.

வடக்கில் பலமிழக்கும் தமிழரசு கட்சி - உதய கம்மன்பில

வடக்கில் பலமிழக்கும் தமிழரசு கட்சி - உதய கம்மன்பில

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்