உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் முறைப்பாடு
CID
Bishop Cyril Gamini
Zahran Hashim
Ester attack
By Shalini
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ( General Suarez Saleh) முறைப்பாட்டினை முன்வைத்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி( Syril Gamini ) உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்த்து இவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு தலைமைத்துவம் வகித்த தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிமுக்கு(Zahran Hashim), புலனாய்வு பிரிவினால் நிதி மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்பட்டதாக கடந்த 23ஆம் திகதி அருட்தந்தை சிறில் காமினி ( Syril Gamini)தெரிவித்திருந்ததாக அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது .