எக்னலிகொடவின் மனைவிக்கு பிரிகேடியர் மிரட்டல்

Sri Lanka Army Anura Kumara Dissanayaka Prageeth Eknaligoda
By Sumithiran Feb 10, 2026 02:43 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சந்தியா எக்னெலிகொடவுக்கு ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் ஒருவரினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து அவர், தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், வலியுறுத்தியுள்ளார்.

ஜனவரி 16 ஆம் திகதி, 0751679672 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து, தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அழைப்பாளர் தன்னை அமைதியாக இருக்குமாறும், இல்லையெனில் கணவரைப் போன்ற நிலையையே எதிர்கொள்ள நேரிடும் என்றும் மிரட்டியதாகவும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

அனுரவின் ஆட்சியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

என் கணவருக்கு நீதி கேட்டு நான் போராடி வருவதால், கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு நபர்களிடமிருந்து எனக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன. ஆனால் இந்த அழைப்பு என்னை பயமுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எக்னலிகொடவின் மனைவிக்கு பிரிகேடியர் மிரட்டல் | Retired Army Brigadier Threatens Eknaligodas Wife

இந்த அச்சுறுத்தல் முந்தைய ஆட்சியின் போது வந்திருந்தால், எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பிரகீத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு இராணுவத்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தேன்.

தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை

தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை

கொலை மிரட்டலை அடுத்து ஜனாதிபதிக்கு கடிதம்

வாகன விபத்து அல்லது அதுபோன்ற வழியில் கூட நான் கொல்லப்படலாம். அது நடப்பதற்கு முன்னர் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், அவர்கள் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

எக்னலிகொடவின் மனைவிக்கு பிரிகேடியர் மிரட்டல் | Retired Army Brigadier Threatens Eknaligodas Wife

கொலை மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, சந்தியா எக்னெலிகொட ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், காவல்துறையின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் உதவி மற்றும் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பணியகம் (OHCHR) போன்ற அனைத்துலக அமைப்புகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

எனினும், சந்தியாவின் கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. தொலைபேசி எண் பதிவு செய்யப்படாத எண் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சில தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கைது

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026