சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த வடக்கு ஆளுநர் பணிப்பு!

Ministry of Health Sri Lanka Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Sathangani Aug 01, 2023 04:28 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று (31) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர்,  சுகாதார அமைச்சு செயலாளர்,  மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மற்றும் வைத்திய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடப்பட்டது.

சுகாதார சேவையை  நாடுவோருக்கான சிகிச்சை, முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆகிய விடயங்கள் சுகாதார சேவை நிலையங்களில் ஒரே விதமாக நோக்கப்படலாகாது என்றும் அவை வெவ்வேறான முறைமைகள் ஊடாக அணுகவேண்டியவை என்பதை வலியுறுத்துவதாக ஆளுநர் கருத்து தெரிவித்தார்.

வினைத்திறனான சேவைகள்

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த வடக்கு ஆளுநர் பணிப்பு! | Review The Health System The Northern Governor

வைத்தியர்களின் விடுப்பு நேர பதிலீடு,  உணவுப் பாதுகாப்பு, வெளிநோயாளிகள் முறையாக மருந்துகளை பெற்றுக் கொண்டு அதனை கிரமமாக உபயோகிப்பதற்கான கண்காணிப்பு, அவசர நோயாளர்  காவுவண்டிகளின் பராமரிப்பு, சுகாதார சேவைப் பணிமனைகளின் ஊடாக வழங்கப்படும் சேவைகள், உள்ளூராட்சி மன்ற சேவைகளில் சுகாதார சேவை பணிமனைகளின் காத்திரமான ஈடுபாடு என்பன எவ்வளவு வினைத்திறனாக நடைபெறுகின்றது என்பது பற்றி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் ஆளுநர் கேட்டறிந்ததுடன் அந்த முறைமைகள் அடிக்கடி மீளாய்வுக்குட்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறனாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேவேளை, தூர மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ய நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்படும் என  வடக்கு மாகாண பிரதம செயலாளர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் சுகாதாரம்

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த வடக்கு ஆளுநர் பணிப்பு! | Review The Health System The Northern Governor

பாடசாலைகளில் சுகாதார நிலைமைகள் பற்றி ஆளுநர் கேட்டறிந்ததுடன், அதிகாரிகள் பாடசாலைகளில் குடிநீர், சுகாதாரம், சுத்தம், ஆரோக்கியம் என்பவற்றில் அதிக கரிசனை கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய போட்டிக்கல்வி முறை உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்குவது பற்றியும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பாக அறிந்து கொள்வதற்குரிய முறைமைகளை உருவாக்க வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வெவ்வேறு துறையினரும் இணைந்து செயற்பட்டு தீர்வுகளைக் காண வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் எடுத்துரைத்திருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025