நாட்டில் அதிகரித்த அரிசி விலை : காரணத்தை போட்டுடைத்த அமைச்சர்
இலங்கையின் சந்தையில் செயற்கையான அரிசி பற்றாக்குறையை உருவாக்கி அரிசி விலையை அதிகரிப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) குற்றம் சாட்டியுள்ளார்.
பண்டிகை காலத்தை குறிவைத்து, அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறு நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்க நடவடிக்கை எடுத்தால், மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் நெல் அறுவடையில் சுமார் ஐந்தில் மூன்று பங்கு பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
விவசாய அமைச்சு
ஆனால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பேரழிவுகள் காரணமாக, குறித்த பருவத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட நெல்லை அறுவடை செய்ய முடியவில்லை.
பெரும்போகத்தில் 2.9 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்டாலும், அது 2.6 மில்லியன் மெற்றிக் தொன்னாகக் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.
இத்தகைய பின்னணியில், சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலம்
இருப்பினும், பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு அரிசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் தலையிட்டு வருகின்றது.” என தெரிவித்தார்.
இதேவேளை பண்டிகை காலத்தை குறிவைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடு முழுவதும் தனது சோதனைகளை விரிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகளையும், கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளையும் கண்டறிய இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
