ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ள முக்கிய விடயம்
கைது செயய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றம் செல்வதற்கான எந்தவொரு சட்ட சிக்கலும் கிடையாது என சட்ட மாஅதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
. கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி அதிகாலை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனை, 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் அனுமதி பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு சமுகமளிக்க அனுமதிக்குமாறு, எதிர்க்கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு அவரை அனுமதித்தால் அவர் தெரிவிக்கும் விடயங்கள் வெளியே கசிந்து விடும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
இந்த நிலையிலேயே, சட்ட மாஅதிபர் இந்த விடயத்தை இன்று தெரிவித்துள்ளார்.