ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு : நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தாம் எந்தவித அடிப்படையும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (02)திகதி நிர்ணயித்துள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டமை
2021 ஆம் ஆண்டு எவ்வித காரணங்களும் இன்றி கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
