பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எதிர்கொள்ளும் உட்கட்சி கிளர்ச்சி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதலாவது உட்கட்சி கிளர்ச்சியை எதிர்கொண்டுள்ளார்.
அடுத்தவாரம் அவரது அரசாங்கம் கொண்டுவரவுள்ள இணையத்தளங்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் தேவையென 40 இற்கு மேற்பட்ட அவரது கட்சி உறுப்பினர்கள் கிளர்ச்சி செய்துவருகின்றனர்.
சுனக்கின் முதலாவது சவால்
தனது சொந்தக்கட்சியில் 40 க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் இந்தக் கிளர்ச்சி பிரதமர் ரிஷி சுனக்கின் முதலாவது சவாலக உருவாகியுள்ளது.
இணைய வலையமைப்பில் வெளியிப்படும் தீங்கான விடயங்களால் சிறார்கள் பாதிக்கப்படுவதால் இவ்வாறான பாதிப்புக்களை தவிர்க்கதவறும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையிலான இந்தச் சட்டத்தில் கென்சவேட்டிவ் கட்சியின் 40 இற்கு மேற்பட்ட பின்வரிசை உறுப்பினர்கள் திருத்தங்களை கோரியுள்ளனர்.
அவர்கள் கோரும் இந்தத் திருத்தங்கள் உள்ளடக்கப்படாவிட்டால் அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்போதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
உட்கட்சி கிளர்ச்சியை தவிர்க்க யுக்தி
இந்த விடயத்தில் நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினால் ரிஷி சுனக் அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கபட்டால் அது அரசின் பெரும்பான்மையை இழக்கவைக்கும் என அஞ்சப்படுவதால் சொந்தக் கட்சி உறுப்பினர்களின் இந்தக் கிளர்ச்சி பிரதமர் ரிஷி சுனக்கின் முதலாவது சவாலாக உருவாகியுள்ளது.
இந்தத் திருத்தத்துக்கு கென்சவேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் சேர். இயன் டங்கன் ஸ்மித், முன்னாள் உள்துறையமைச்சர் பிரிதி படேல் மற்றும் ஆண்ட்ரியா லீட்சம் உட்பட குறைந்தது 10 முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு வழங்குவதால் அரசாங்கம் கவலையில் இருப்பதாக தெரிகிறது.
தற்போது இந்த உட்கட்சி கிளர்ச்சியை தவிர்க்க புதிய சட்டமசோதாவில் சில திருத்தங்களை கொண்வர அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
