மன்னார் கடலில் கொட்டிக்கிடக்கும் புதையலை குறி வைக்கும் அமெரிக்கா? இலங்கைக்கு ஆபத்து
கெரவலப்பிட்டிய LNG மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்காவுக்கு கொடுப்பதன் மூலம், மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை இலங்கை இழக்க நேரிடும் என மின்சார தொழில்நுட்பவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ தம்மிக கூறுகிறார்.
மின்சார தொழில்நுட்பவியலாளர் ஒன்றியம் நேற்று (29) ஏற்பாடு செய்த சிறப்பு கலந்துரையாடலில் அவர் இதை குறிப்பிட்டார்.
LNG மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க ஏகபோகத்திற்கு வழங்குவது மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறுவதாகவும், நாட்டின் எரிசக்தி துறை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்றும், இந்த துறையில் அமெரிக்கா காலவரையறையின்றி நீடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.