ஏப்ரலில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
இவ்வாண்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அதன் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.
அரிசி தட்டுப்பாடு
மேலும் கருத்து தெரிவித்த அவர், "இன்று, ஒரு கிலோ நாட்டு அரிசியை 225 ரூபாய் மொத்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

வெள்ளை அரிசி 208-212 ரூபாக்கும், சிவப்பு அரிசி வகைகள் 205- 210 ரூபாய்க்கும் பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும், சம்பா மற்றும் கீரி சம்பா மிகவும் விலை உயர்ந்தவை. கீரி சம்பா 340 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. சம்பா அரிசி 260 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சம்பா மற்றும் கீரி சம்பாவின் விலை அதிகரிக்கும் போது, வெள்ளை அரிசி மற்றும் நாட்டு அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, நெல் விலை அதிகரித்தால், இந்த நிலை மேலும் மோசமடையும்.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் சம்பா மற்றும் கீரி சம்பாவின் விலை இன்னும் அதிகமாகும்." என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |