ரிசாட் உள்ளிட்ட மூவருக்கு மறியல் நீடிப்பு
case
death
court
rizad
ishalini
By Vanan
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணி புரிந்த ஹிஷாலினி ஜுட் குமார் என்ற மலையச் சிறுமி, தீக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளிலேயே, சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ரிஷாட் பதியூதீனின் மைத்துனர் மற்றும் இடைதரகர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.