இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை எது தெரியுமா!
இந்த ஆண்டின் சிறந்த வார்த்தைக்காக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய வாக்கெடுப்பின் படி ரிஸ் (Rizz) என்ற வார்த்தை சிறந்த வார்த்தையாக தெரிவாகியுள்ளது.
சிறந்த வார்த்தைக்காக தேர்வுக்காக 8 வார்த்தைகள் பட்டியலிடப்பட்டது.
பட்டியலிடப்பட்ட 8 வார்த்தைகளும் 2023ல் மக்களின் மனநிலை, ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒக்ஸ்போர்டு அகராதியின் விளக்கம்
8 வார்த்தைகளுள் சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அரட்டையடிப்பதில் அல்லது ஊர் சுற்றுவதில் நீங்கள் ஆர்வம் உள்ளவர்கள், காதலை வெளிப்படுத்துதல் என இளைஞர்களால் இந்த வார்த்தை அதிகளசவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரிஸ் (Rizz) என்ற வார்த்தைக்கு ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி காதல் அல்லது பாலியல் துணையை ஈர்க்கும் திறன், சுருக்கமாக, இது 'கரிஸ்மா' (charisma) என்ற வார்த்தையின் மையப்பகுதி என ஒக்ஸ்போர்டு அகராதி விளக்கம் அளித்துள்ளது.
மேலும் ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை வினைச்சொல்லாகவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |