நூதனக் கொள்ளையில் ஈடுபட்டவர் வசமாக சிக்கினார்!
arrest
police
robber
morattuwa
By Vanan
இரவு வேளைகளில் சொகுசு காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபரொருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ - கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த சந்தேக நபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும், கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு திருடப்பட்டுள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என ஆரம்ப கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.