தங்க அடகுக் கடைக்குள் புகுந்து கொள்ளை : சிக்கிய சந்தேக நபர்
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
Gold
By Sathangani
கண்டி - நாவலப்பிட்டியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அடகுவைக்கும் நிலையத்திற்குள் புகுந்து திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர் குறித்த பணத்தில் சுமார் 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள உந்துருளியொன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபர் கடந்த 3 மாதங்களாக நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
