மூதாட்டியை தாக்கிவிட்டு நகை மற்றும் பணம் கொள்ளை..! யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kanna
யாழ். சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை - ஐயா கடைச் சந்திப் பகுதியில் நேற்று(16) கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
முகமூடி மற்றும் கையுறை ஆகியன அணிந்து வந்த கொள்ளையன் ஒருவனே குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன் ஒருவன் தனிமையில் இருந்த மூதாட்டியை கன்னத்தில் தாக்கி விட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இதன்போது பத்தரைப் பவுண் நகை மற்றும் ஒரு இலட்சத்து 13,000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி