மனிதர்கள் போல நடனமாடிய ரோபோக்கள்...வைரலாகும் காணொளி
இன்றைய தொழிநுட்பம் மனித யூகங்களையும் மிஞ்சும் அளவுக்கு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், சீனாவில் நடந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது மாத்திரமின்றி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு சீனாவில் நடந்த வசந்த விழா கொண்டாட்டத்திலேயே அந்த ஆச்சரியமூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில், பதினாறு மனித உருவ ரோபோக்களான யூனிட்ரீ H1 மாதிரிகள், மனித நடனக் கலைஞர்களுடன் மேடையில் ஏறி நடனமாடியுள்ளன.
புதிய சாதனை
அவர்களின் நிகழ்ச்சியில், நடனக் கலைஞர்கள் கைக்குட்டைகளை ஒற்றுமையாக தூக்கிப் பிடிக்கும் பாரம்பரிய நடனத்தை ஆடியுள்ளனர்.
இந்த நடனத்தின் போதே குறித்த 16 ரோபோக்களும் சரியான முறையில் நடனம் ஆடியுள்ளன.
Unitree H1: Humanoid Robot Makes Its Debut at the Spring Festival Gala 🥰
— Unitree (@UnitreeRobotics) January 28, 2025
Hello everyone, let me introduce myself again. I am Unitree H1 "Fuxi".
I am now a comedian at the Spring Festival Gala, hoping to bring joy to everyone.
Let’s push boundaries every day and shape the future… pic.twitter.com/MsFuIo6BL0
ரோபோக்களினால் சிக்கலான நடன அசைவுகளை இலகுவாக ஆட முடிந்தாலும், மனிதர்கள் வெளிப்படுத்தக்கூடிய உணர்வு ரோபோக்களிடம் இல்லை. எனினும், தொழில்நுட்ப ரீதியாக, இந்த செயல்திறன் ஒரு புதிய சாதனையாகும்.
இந்நிலையில், தற்போது இணையத்தில் இந்த ரோபோக்களின் நடனம் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளதுடன், வேகமாக வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)