சிட்னி டெஸ்ட் போட்டி : திடீரென விலகிய ரோகித் சர்மா
Jasprit Bumrah
Rohit Sharma
Indian Cricket Team
Australia Cricket Team
By Sumithiran
இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று(03) அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவராக பும்ரா(jasprit bumrah) செயல்படுகிறார். ரோகித் சர்மாவுக்கு(rohit sharma) பதிலாக அணியில் சுப்மன் கில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
திடீரென விலகிய ரோகித் சர்மா
அணித்தலைவராக இருந்த ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். ஏற்கனவே இந்தப் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளருடன் முரண்பாடு
இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் ரோகித் சர்மாவிற்கு முரண்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை தொடங்கிய போட்டியில் இந்திய அணி 02 விக்கெட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்