யாருக்கும் அஞ்சமாட்டோம்! பெரமுன திட்டவட்டமான பதில்
srilanka
rohitha abeygunawardana
By Vasanth
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு கட்சிக்கும் பயப்படவோ, எந்தவொரு நபரின் பின்னாலோ செல்லாது என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களுக்கு களுத்துறையில் வைத்து கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆளும் அரசாங்கத்தில் உள்ள சிறு கட்சிகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. எந்தவொரு கட்சிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த உரிமை உள்ளது.
ஆனால் எங்கு முகமூடி அணிந்து போலி முகத்தை காட்டினாலும் வௌியில் தான் ஆட வேண்டும்.
வாலால் நாயை வளைக்க முடியாது. நாய் தான் வலை வளைக்கும் என ரோஹித்த அபேகுணவர்த்தன பங்காளிக் கட்சிகளின் செயலுக்கு மேலும் பதில் வழங்கியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்