அரசு கவிழப் போவது தெரியாமல் கூச்சலிடும் கோமாளிகள்...! எம்.பி ரோஹித சவால்
அரசாங்கம் வீழ்ச்சியடையப் போகிறது என்று தெரிந்தும் தங்களைப் பலசாலிகள் எனத் தெரிவித்து கூச்சலிடும் கோமாளிகளாலேயே கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், "எங்கள் அரசாங்கம் வீழ்ச்சியடையும் கடைசித் தருணத்திலும் இப்படியான கோமாளிகள் எம்மோடு இருந்தார்கள்.
தற்போதைய அரசாங்கம்
தற்போதைய அரசாங்கத்திலும் அத்தகையவர்களே இருக்கிறார்கள்.

அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சலிடட்டும், திட்டட்டும், நாங்கள் அனைத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
உங்களின் சவால்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதை நாங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுப்போம்.
உண்மையான நிலை
இன்று நாட்டின் உண்மையான நிலைமை என்னவென்றால் ஒட்டுமொத்த வணிகத் துறையும் முற்றாகச் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த நாட்டில் இயங்கும் பெரும்பான்மையான வணிக நடவடிக்கைகளுக்கு எரிபொருளும் எண்ணெயும் அத்தியாவசியமானவையாகும்.
அவ்வாறான நிலையில் எரிபொருட்களின் விலையைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம் இந்தத் தொழில்துறைகளுக்கு அரசாங்கம் வழங்கும் தீர்வு அல்லது பலன் என்ன ?" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்