தேர்தலில் களமிறங்கும் மகிந்தவின் புதல்வர் - தயாசிறிக்கு ஏற்பட்டுள்ள அச்சம்
சிறிலங்காப் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa ) கடைசிப் புதல்வராகிய ரோகித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.
இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோகித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே குருநாகல் மாவட்டத்தின் பிரபல்யமான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் (Dayasiri Jayasekara) வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும் ரோகித ராஜபக்சவை (Rohitha Rajapaksa) வெல்ல வைப்பதற்காக ராஜபக்ச குடும்பத்தினர் தயாசிறி ஜயசேகரவை (Dayasiri Jayasekara) போட்டியிட இடமளிக்க மாட்டார்கள் என்றும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.