வெல்லம்பிட்டியவில் சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உட்பட 40 பேர் கைது
வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் இன்று (26) அதிகாலை காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
138 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 200 இராணுவ அதிகாரிகள் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள், அதிகரித்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்கள் ஆகிய காரணங்களுக்காக இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
40 பேர் கைது
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், மேல் மாகாணம் தெற்கிற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர், மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், காவல்துறை அத்தியட்சகர் லித் அபேசேகர ஆகியோரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத மதுபானம், வாள்கள், மன்னா கத்தி, தடைசெய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 40 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்