விவசாயிகளுக்கான உர மானியம் : வெளியான அறிவிப்பு
2026/27 பெரும்போகத்தில் நெல் மற்றும் வயல் நிலங்களில் பயிரிடப்படும் ஏனைய களப் பயிர்களுக்காக உர நிதி மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேயர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026/27 பெரும்போக உர நிதி மானியத்திற்காக மதிப்பிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 16 பில்லியன் ரூபாயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர் முன்வைத்த யோசனை
நெற்செய்கைக்கு மேலதிகமாக, போகங்களுக்கான கூட்டங்களில் தீர்மானிக்கப்படும் மற்றும் விவசாயப் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்படும் ஏனைய களப் பயிர்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |