யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை : நீதிமன்றம் விதித்த அபராதம்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்த இருவருக்கு 48,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒருவருக்கு தலா 24,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்நிதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி 1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் உதயபாலா, சார்ல்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மல்லாகம் நீதவான் நீதிமன்றம்
இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கும் எதிராக அச்சுவேலி 1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலனால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |