ரூ. 50 மில்லியன் வெளிநாட்டிலிருந்து கொள்ளை! சிஐடியின் அதிர்ச்சி அறிக்கை
நாட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தைப் போல வடிவமைக்கப்பட்ட பல போலி வலைத்தளங்கள் மூலம் ரூ. 50 மில்லியன் டிஜிட்டல் மோசடி சம்பவத்தில் வெளிநாடுகளில் இருந்து பைனான்ஸ் கணக்குகள் இயக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலானாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் இன்று (2) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் மேலும் அறிக்கையை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வு திணைக்களம், இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் அல்லது மூளையாக செயல்பட்டவர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, ஹாங்காங்கிலிருந்து வந்த ஒரு குழு இந்த வலையமைப்பை இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதன்படி, சம்பவத்தில் தொடர்புடைய ஆறு முதல் பத்து சந்தேக நபர்களை ஒக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் மற்ற இரண்டு சந்தேக நபர்களுக்கு பிணையும் வழங்கியுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால், அவர்கள் அனைத்து தரவுகளையும் நீக்கக்கூடும் என்றும், இதனால் விசாரணைக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், சிறையில் உள்ள சந்தேக நபர்கள் வைத்திருக்கும் பைனான்ஸ் கணக்குகள் தொடர்பாக எடுக்க எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
