பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 50,000 ரூபாய் கொடுப்பனவு : வெளியான தகவல்
நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, இதுவரை 3,665 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவைகள் நிலையம் (National Disaster Relief Services) தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தக் கொடுப்பனவுக்கு 147,628 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக அந்த நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க (K. G. Dharmathilaka) தெரிவித்துள்ளார்.
காணி உரிமை அவசியம் இல்லை
இந்தநிலையில் 25,000 மற்றும் 50,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு காணி உரிமை அவசியம் இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை டித்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் எனவும் வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கும், ஒரு கோடி ரூபாய் நிதி பெற்றுக் கொடுக்கப்படும் என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க (Susil Ranasingha) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |