அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் - பொதுமக்களுக்கு கோரிக்கை
டிட்வா சூறாவளியால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த தகவல்களை டிசம்பர் 25 ஆம் திகதிக்குள் வழங்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
சபையின் தலைவர் தெரிவிக்கையில், உள்ளூர் கிராம அலுவலர்கள் மூலம் இந்தத் தகவலுக்கான பல கோரிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நஷ்ட ஈட்டுத் தொகை
நஷ்ட ஈட்டுத் தொகை பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையைத் தீர்மானிக்க இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படும்.

அழிக்கப்பட்ட ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 10,000 என்ற முன்மொழியப்பட்ட மானியம் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று தெளிவுபடுத்தினார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களையும் பரிசீலித்த பின்னரே நஷ்ட ஈடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்