அரச ஊழியர்களின் சம்பளம் : வெளியான சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகள்
நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகளை கடுமையாக கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை சிறிலங்கா நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி, மாதாந்த கூடுதல் நேரத் தொகை அடிப்படைச் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது மற்றும் விடுமுறை ஊதியம், பிற கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக கூடுதல் நேரக் கொடுப்பனவு ஒதுக்கப்படாது.
சம்பந்தப்பட்ட நிறுவனமே முழுச் செலவையும் ஏற்காத பட்சத்தில், வெளிநாட்டுப் படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல், மாநாடு, பயணங்களில் அலுவலர்கள் பங்கேற்கக் கூடாது.
கலந்துரையாடல்கள் நிகழ்நிலையில்
செயற்படுத்தப்படும் திட்டங்களின் நிதியைச் செலவு செய்து அதிகாரிகளை வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுப்பக் கூடாது என்றும் அரச நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கூட்டங்கள், பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் முடிந்தவரை நிகழ்நிலையில் நடத்தப்பட வேண்டும், மற்றும் அதிகாரி நேரில் முன்னிலையாக வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சலுகை
இதேவேளை அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகன உரிமையின்படி ஒரு வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மற்றும் உத்தியோகபூர்வ வாகன உரிமைக்கு பதிலாக மாதாந்த போக்குவரத்து கொடுப்பனவு பெறும் அதிகாரிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்பதிவு வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது.
மற்றும் முன் அனுமதியின்றி மாதாந்த வாடகை அடிப்படையில் அல்லது இயக்க குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெறக்கூடாது.
மேலும், ஏற்கனவே பெற்றுள்ள சலுகைகளான தொடருந்து, வீதிப் போக்குவரத்துச் சீட்டு, போக்குவரத்து வசதிகள் தவிர, பொதுப்பணிகளுக்கு வருவதற்கும், செல்வதற்கும் அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது.
அச்சிடலுக்கு தடை
அரசாங்கத்தைப் பயன்படுத்தி நாட்குறிப்பேடு, குறிப்புப் புத்தகங்கள், நாட்காட்டிகள், அழைப்பிதழ்கள், வாழ்த்து அட்டைகள் என்பவற்றை அச்சிடக் கூடாது.
அவசரகால கொள்முதல் நடைபெறாத வகையில், முறையான ஒப்புதல் மற்றும் தேவைகளை முன்கூட்டியே அடையாளம் காணாமல், அரச நிறுவனங்களுக்கு நேரடி வெளிநாட்டு மானியங்களைப் பெறக்கூடாது.
ஆகிய விடயங்கள் வெளியான சுற்றறிக்கை விதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |