ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு - ஆளும்தரப்பு எம்.பி கடும் அதிருப்தி
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தியமைக்கு ஆளும் கட்சி எம்.பி ஒருவர் தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க(Weerasumana Weerasinghe) என்ற நாடாளுமன்ற உறுப்பினரே அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக வீரசுமண வீரசிங்க நேற்றுமுன்தினம் (13) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த முடிவு அரசுத் துறையில் சேர இருக்கும் இளைஞர்களுக்கு சிக்கலை உருவாக்கும் என்றும், அரச சேவையாளர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் 65 வயது வரை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டும் அனுமதிப்பது பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறினார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.